சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்தார் முதல்வர் முக.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்தார்.

புது டெல்லி,

முதல்வராக பதவியேற்ற முதன் முறையை அரசு பணிகளுக்காக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின். பின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் மு ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்தார். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு  நடைபெற்றது. இச்சந்திப்பில் பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!