வன்னியார் சமூகத்திற்கு 10.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்

வன்னியார் சமூகத்திற்கு 10.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க முடியாது என்று தமிழகத்தைச் சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வன்னியார் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து இருவர் சென்னை மக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு விதிக்க முடியாது. ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த அபிஷேக் குமார் தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும். இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

 

Translate »
error: Content is protected !!