அமைச்சரவை மறுசீரமைப்பு.. 43 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு

2019 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். மத்திய அமைச்சரவை அரசாங்கம் அமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

43 மத்திய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர் என்று ANI செய்தி வெளிட்டுள்ளது. இன்று, அமைச்சர்களாக ஆக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் எம்.பி.க்கள் பிரதமர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் பதவி விலகியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவும் ராஜினாமா செய்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!