இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக 12 அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் 12 அமைச்சர்களின் ராஜினாமாக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில்  43 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியம் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கும், அமைச்சரவைக் கூட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!