உத்தர பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வகை கொரோனா

உத்தர பிரதேசத்தில், இரண்டு பேருக்கு கப்பா வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் ஒரு ஆய்வகத்தில் மரபணு வரிசைமுறை மாதிரிகளை பரிசோதித்ததில் கப்பா தொற்று இரண்டு பேருக்கு தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 107 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “இப்போது பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே காணப்பட்டவைதான். இருப்பினும், கொரோனா வைரஸின் மரபணு வரிசைமுறையைக் கண்டறிய கூடுதல் மையங்கள் அமைக்கப்படும். ” என்றார்.

 

Translate »
error: Content is protected !!