கர்நாடகாவில் சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – அரசு உத்தரவு

கர்நாடகாவில், நகரங்களில் சொத்து வரி கடந்த ஜூலை மாதம் செலுத்தினால்  5 சதவீத தள்ளுபடியை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சலுகை காலம் கடந்த மாதம் முடிவடைந்தது.

கர்நாடகாவில் கொரோனா பரவலால் மக்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில் 5 % தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்துவதற்கான சலுகைக் காலத்தை கர்நாடக அரசு அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த மாதத்திற்குள் வரி செலுத்தத் தவறினால் அடுத்த மாதம் சொத்து வரியில் 2 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!