காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. காரணம் என்ன..?

காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் விதிகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை குறித்து காங்கிரஸ் கட்சி தனது முகநூல் பக்கத்தில் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும் ட்விட்டர் விதிமுறைகளை மீறியது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம், என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Translate »
error: Content is protected !!