ஹரியானாவில் 12 வயது சிறுமி மேம்பாலத்தை திறந்து வைப்பு

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அம்மாநிலத்தின்
12 வயது சிறுமி ஒரு மேம்பாலத்தை திறந்துள்ளார்.

ஹரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் ஒரு புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு 10 நாட்கள் ஆகியும், அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பாலம் திறக்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் 12 வயது குஷிலகராவுடன் பாலத்தைத் திறந்தனர். பாலத்தை திறக்கும் மரியாதை சிறுமிக்கு கிடைத்தது.

Translate »
error: Content is protected !!