அசாமில் இரவு நேர ஊரடங்கு அமல்

அசாமில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் அசாமில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். இதற்கிடையே, அவசர சேவைகளுக்கு 24 மணி நேரமும் அனுமதிக்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!