சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 35,608 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 4,451 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 68.50ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 68,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனையாகிறது.