ராமர் கோவிலுக்கு அனுப்ப உள்ள விக்கிரங்களுக்கு சிறப்பு பூஜை

அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட உள்ள ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் விக்கிரங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்பணி மிக வேகமாக நடைப்பெற்று வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கோவில்களுக்கு பல்வேறு விதத்தில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளியிலான ராமர் பாதம், ராமர், சீதை, லட்சுமனன், அனுமார் உள்ளிட்ட விக்கிரங்களை கோவிலுக்கு அனுப்ப சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பஜனை,நெய்வேதியத்துடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

மேலும் கங்கை, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, பிரணிதா, கண்டகி, சிந்து, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் மற்றும் அந்த நதிகளில் எடுக்கப்பட்ட புண்ணிய மண்கள் கலசத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த சாமி விக்கிரங்கள் ஆந்திரா, கேரளா வழியே வட மாநிலங்களுக்குள் நுழைந்து அயோத்தி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!