அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், அசாமில் வரும் 20ஆம் தேதி முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும். பள்ளி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் கூறினார்.