தமிழகத்தில் ஐ.ஏ,எஸ். அதிகாரிகள் சிலர் மாற்றம்…

தமிழகத்தில் ஒரு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அரசாணையில், கலை மற்றும் கலாசார ஆணையர்கலையரசி, பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மற்றும் கூடுதல் ஆட்சியரான பிரதிக் தயாள், நிதித்துறையின் துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.  பொது மற்றும் மறுவாழ்வு துறையின் துணைச் செயலாளர் பிரதீப்குமார், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக மாற்றப்பட்டார். சிதம்பரம் உதவி கலெக்டர் எல்.மதுபாலன், ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மற்றும் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர மாநகராட்சியின் மண்டல துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!