பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாம செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் சில மாதங்களாக முன்னாள் முதல் அமைச்சர் அமரிந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சித்து இடையே மோதல் நிலவியது. இதனிடையே அமரிந்தரின் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சித்து, அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது கூடுதல் பிளவை ஏற்படுத்த, நவ்ஜோத் சித்து ஆதரவு எம்எல்ஏக்களும் அமரிந்தர் சிங்கிற்கு எதிராக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விடுத்தனர்.
ஆனால் அண்மையில் அமரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து பட்டியலினத்தை சேர்ந்தவரும், நவ்ஜோத்துக்கு நெருக்கமானவருமானவருமான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். அமரிந்தர் சிங்கிற்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏக்களும், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், நவ்ஜோத் சிங் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினர்.