நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் மனு

நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சூழலில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் கேள்வித்தாள் வெளியானதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருந்தது, பயிற்சி மையங்களில் நீட் வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்கி முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டம் நடந்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது. தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் தேர்வு, ஜாமர் உள்ளிட்ட உபகரணங்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் இந்த கோரிக்கைகள் விடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!