ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க முடியாது… நீதிமன்றம் அதிரடி

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர்  நடிப்பில் ஜிஎம் பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1 ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம் இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடபட்டது. இந்த படம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இருப்பதாகவும், அவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில்  இருப்பதாகவும், கூறி, படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த 6 உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி, பிரபாகரன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி படத்தின் டிரைலர் மட்டும் வெளிவந்துள்ளதாகவும் முழு படத்தையும் பார்க்காமல் மனுதரார் கருத்து யுகத்தின் அடிப்படையில் உள்ளது எனவும் மேலும் கடைசி நிமிடத்தில் இந்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளதால் தற்போதைய நிலையில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்து உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!