ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனைக்கு தடை விதித்து, அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3-வது அலை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 31-ம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்களை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைப்போல பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க மற்றும் விற்க தடை செய்யப்படுவதாகவும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.