ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தக பட்டியலில் இருந்து சீனாவை சேர்ந்த பிரபல எவர்கிரேண்ட் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக எவர்கிரேண்ட் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
இதன் சுமையில் இருந்து மீள தனது சொந்த ஊழியர்களிடமே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் நிறுவனத்திற்கு லோன் தராத ஊழியர்களுக்கு எவர்கிரேண்ட் நிறுவனம் போனஸ் கிடையாது என அறிவித்தது.
மேலும் கடனில் மூழ்கி தத்தளித்து வரும் பிரபல எவர்கிரேண்ட் நிறுவனத்தின் பங்குகள் ஹாங்காங் பங்குச் சந்தை-யில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 80 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தக பட்டியலில் இருந்து எவர்கிரேண்ட் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. இது அந்த நிறுவன ஊலிதியர்களிடையே அதிர்ச்சியையை ஏற்படுத்தியுள்ளது.