தன்னிச்சையாக செயல்படும் தேர்தல் ஆணையம்- பரபரப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் கருத்துக்களை கேட்காமல், புதுச்சேரி தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் கருத்துக்களை கேட்காமல், புதுச்சேரி தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது.  உள்ளாட்சி தேர்தலை தேதியை மறுபரீசிலனை செய்ய வேண்டும்.. இட ஒதுக்கீடு, வார்டு மறுசீரமைப்பில் பல்வேறு குளறுபடிகள் நடத்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் உள்ள குளறுபடிகளுக்கு கடந்த கால காங்கிரஸ் அரசே காரணம். காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது இதனால் மக்கள் பாதிக்கப்படுவர் என்றார்.

Translate »
error: Content is protected !!