கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதாவது, கடந்த மாதம் 1 மற்றும் 5 ம் தேதிகளில் விஜயபுரா மாவட்டம் பசவகல்யாண் தாலுகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், கலபுரகியில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த 11 நாட்களில் வடக்கு கர்நாடகாவில் ஏற்படும் 4-வது நிலநடுக்கம் இதுவாகும்.