கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த நிலையில், இன்று காலை அதன் தீவிரத்தன்மை குறைந்துள்ளது. புதிதாக, எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில், “கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.