திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தனித்தனி வாக்காளர் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னுலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்.
திருச்சி மாவட்டத்தில் 10 லட்சத்து 99 ஆயிரத்து 977 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 60 ஆயிரத்து 256 பெண் வாக்காளர்களும், 206 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 14.02.2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, ஆண்கள் 21897 பேரும், பெண்கள் 21209 பேரும், பிற பாலினத்தவர்கள் 9 பேரும் என 43115 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல்…வரைவு வாக்காளர் பட்டியலில் , ஆண்கள் 2974 பேரும், பெண்கள் 3468 பேரும், பிற பாலினத்தவர்கள் 6 பேரும் என 6448 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பெயர் சேர்ப்பு,நீக்கம்,திருத்தம் ஆகியவற்றுக்கு நவம்பர் 20,21 மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதாது வாக்களர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். அப்பொழுது தான் வாக்களிக்க முடியும்.எனவே சிறப்பு முகாமை பயன்படுத்தி 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர் சேர்ப்பு,நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.