இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,451 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 35 லட்சத்து 97 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 585 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 55 ஆயிரம் 653 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!