18-வது உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

இந்தியா ஆசியான் 18-வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தென்கிழக்கு ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஆகியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

கொள்கை ரீதியில் கூட்டு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நிலையில் இதன் 18-வது உச்சி மாநாடு இன்று காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இக்கூட்டத்தில் ஆசியான் – இந்தியா இடையேயான நீடித்த ஒத்துழைப்பு நிலவரம் குறித்தும், கொரோனா, சுகாதாரம், வர்த்தகம், இணைப்பு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!