வன்னியர் இடஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றம் – பாமக அட்வகேட்

10.5 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றமும் கவலையும் அளிப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, 40 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தின் பின்தங்கிய வன்னியர்களுக்கான  இட ஒதுக்கீடுக்கு போராடி 10.5 சதவீதம் இடத்துகீட்டை தமிழக அரசு  வழங்கி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்ற நிலையில், இந்த தீர்ப்பு ஏமாற்றமும் கவலையும் அளிக்கிறது. தமிழக அரசு மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும், இஸ்லாமிய சமூகத்தினர் , அருந்ததியினர் சமூகத்தினருக்கும் இதற்கு முன் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது.மேல் முறையீடு செய்ய தடை இல்லை என்பதால் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றார்.

 

Translate »
error: Content is protected !!