அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் – இந்தியன் ஆயில் நிறுவனம்

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 10,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா, ஓராண்டில் சுமார் 2,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 8,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 1,000 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.

Translate »
error: Content is protected !!