இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 77 ஆயிரத்து 113 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 37 லட்சத்து 75 ஆயிரத்து 086 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,40,638 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 332 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 61 ஆயிரம் 339 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!