பஞ்சாப் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழி கற்பிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிவித்துள்ள முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, “இந்த அறிவிப்பை மீறும் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பஞ்சாபி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பெயர்ப்பலகைகளும் மேலே பஞ்சாபி மொழியில் எழுதப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.