பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு தலைமை பொறியாளர் ஒரு கோடி ரூபாய் வரை டெண்டர் விடாமல் செலவு செய்வதற்கான அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகாரம் உயர்த்தப்படும் என்று பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதை செயல்படுத்தும் விதமாக உதவி பொறியாளர் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 20 ஆயிரம் வரை செலவு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. செயற்பொறியாளர் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரையிலும், கண்காணிப்பு பொறியாளர் 1 கோடி வரை செலவு செய்யலாம் என இருந்த நிலையில் 50 லட்சம் முதல் 2 கோடி வரை செலவு செய்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.