குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சிபிஐ இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. மொத்தம் 14 மாநிலங்களில் 76 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி. ஜோஷ் தெரிவித்தார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.