குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 2 நாட்களுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள சூய் கிராமத்திற்கு சென்று பொது திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சண்டிகர் சென்றுள்ளார். அவரை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் வரவேற்றனர்.