தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது.இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் காலை முதலே மழை பெய்து கொண்டிருக்கின்றது.
மெட்ரோ பணிகளுக்காக சென்னை வடபழனி பகுதியில் இருவழி சாலையாக இருந்த சாலை ஒரு வழி சாலையாக மாற்றி விடப்பட்டது. தற்போது கனமழை காரணமாக வடபழனி பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் அந்த ஒரு வழி பாதையில் வாகனத்தை இயக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் மழை நீர் சூழப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.