ஜம்மு காஷ்மீரில் 25 புதிய தேசிய நெடுஞ்சாலைகள் பணி – அடிக்கல் நாட்டுகிறார் நிதின் கட்காரி

ஜம்மு காஷ்மீரில் 25 புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த திட்டத்திற்கு ரூ.11,721 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 257 கி.மீ., சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த சாலைகள் வழியாக பாதுகாப்பு படையினர் விரைவாக செல்ல முடியும். மேலும், புதிதாக நிர்மாணிக்கப்படும் நெடுஞ்சாலை விவசாயம், தொழில் மற்றும் சமூக மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தின் தலைநகரங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் இந்த புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!