முதலமைச்சர் தலைமையில் தொழில்துறை கருத்தரங்கு

கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் சி.ஐ.ஐ தொழில் கூட்டமைப்பு  மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து ‘கனெக்ட்’ என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசின் மின் ஆளுமை நிறுவனம் – சென்னை கணித்துறை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது எனவும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர் எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் டேட்டா சென்டர்கள் அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது எனவும் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!