கூராடங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கொடைக்கானல் புறநகர் மற்றும் மேல்மலை கிராமங்களில் சட்டவிரோதமாக கூடாரங்கள் அமைத்து வாடகைக்கு விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாச்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் சுற்றுலாத்தளங்களில் மிகவும் பிரசித்திபெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புறநகர் மேல்மலை கிராமமான மன்னவனூர், பூம்பாறை, குண்டுபட்டி, வட்டகாணல், பாம்பார்புரம்,  பிரகாசபுரம் போன்ற பகுதிகளில்  ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலங்களில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணம் தனியார் நிலங்களில் கூடாரம் அமைத்து வாடகைக்கு விட்டு வருவது வழக்கம் இங்கு வெளிமாநிலம் வெளிமாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இளம்பெண்கள்  வருவோர் பல்வேறு விலையுயர்ந்த போதை வஸ்த்துகளை பயன்படுத்தியும் பார்ட்டிகள் வைப்பதுமாகவும் சட்டவிரோத விபரீத செயல்களில் ஈடுபடுவதால் குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றது

இதனால் கொடைக்கானல் புறநகர் பகுதியான தனியார் விவசாய காட்டுப்பகுதி நிலங்களில் சட்ட விரோத கூடாரம் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி தற்போது மறுக்கப்படுவதாகவும் அப்படி மீறி அமைப்போர் மீது சட்டப்படிகடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் கோட்டாட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளார் மேலும் தொடர்ந்து அத்துமீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!