சென்னை அடுத்த திருவேற்காடு, பூந்தமல்லி, ஆவடி பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
வட கிழக்கு பருவமழை பெரியளவில் பெய்து வரும் நிலையில், இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பத்மாவதி நகர் பகுதியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் நாசர், அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டதுடன், வெள்ள பாதிப்பு குறித்து விளக்கினர். பின்னர், மழைநீரை வெளியேற்றும் பணியை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர், அங்கிருந்து முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்காக 1 கி.மீ., நடந்தே சென்றார். போகும் வழியில் குழந்தை ஒன்றுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், மக்களிடம் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.