அரசு அலுவலங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவது போல் விளம்பரம் செய்யப்படுவதாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் படங்களுடன் பிரதமர் மோடியின் படத்தையும் வைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்