டிசம்பர் மாதம்: 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை..! எந்தெந்த நாள்..? முழு விவரம்

இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டது. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் டிசம்பர் மாதத்தில் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் மூடப்பட்டிருக்கும்.

இதன் பற்றிய முழு விவரம்:-

டிசம்பர் 3: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா – கோவாவில் வங்கி விடுமுறை.

டிசம்பர் 5: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 11: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

டிசம்பர் 12: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 18: யூ சோ சோவின் இறப்பு நாள் – ஷில்லாங்கில் விடுமுறை.

டிசம்பர் 19: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 24: கிறிஸ்துமஸ் விழா – ஐஸ்வால் மற்றும் ஷில்லாங்கில் வங்கிகள் விடுமுறை

டிசம்பர் 25: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் – கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் செயல்படாது.

டிசம்பர் 26: ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 27: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஐஸ்வாலில் விடுமுறை

டிசம்பர் 30: யு கியாங் நங்பா – ஷில்லாங்கில் விடுமுறை.

டிசம்பர் 31: புத்தாண்டு ஈவ் – ஐஸ்வாலில் விடுமுறை.

Translate »
error: Content is protected !!