கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இறக்கும் வகையில் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக கோயம்பேடு சந்தையில் மூடப்பட்ட தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக்கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டுமென நீதிபதி இடைக்கால உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி தக்காளிக்கு ஒரு ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஒதுக்கவில்லை என நீதிபதி சுரேஷ்குமாரிடம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். இதனையடுத்து அதிகாரிகளின் இந்த செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.