தமிழக்த்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சு

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக்த்தில் ஓமைக்ரான் பாதிப்பு இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த 477 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை.

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் காய்ச்சல் இருப்பது முதலில் கண்டறியப்படுகிறது. 100 டிகிரி மற்றும் அதற்கு மேல் வெப்ப நிலை உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு இருக்கும் விமானப் பயணிகளுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பப்படுகிறது.

Translate »
error: Content is protected !!