டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீதான நேற்றைய விசாரணையின் போது, 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, டெல்லியில் காற்று மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட தனிப்படை அமைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், 17 பறக்கும் படைகள் கொண்ட கண்காணிப்பு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.