முல்லை பெரியாறில் நீர்வரத்து அளவுக்கு மீறி வந்ததால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடி நீர் வந்ததும் தண்ணீர் திறக்கப்பட்டதாக, கேரள அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு முல்லைப் பெரியாறில் இருந்து முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக கேரள அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருக்கும் அமைச்சர் துரைமுருகன், அணைக்கு அளவுக்கு மீறி நீர்வரத்து வந்து கொண்டிருந்ததாகவும், தண்ணீர் திறக்காவிட்டால் 145 அடியை எட்டும் என்ற நிலை ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தான், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடியை தொட்டதும், அணையில் இருந்து நீரை திறந்து விட வேண்டியதாயிற்று எனவும் விளக்கம் அளித்துள்ளார்.