இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாட்டில் கொண்டு எரிந்து இலங்கை கடற்படையினர் விரட்டியத்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று பெற்று கொண்டு 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்ற போது இலங்கை தலைமன்னார் அருகே இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 10 விசைப்படகு மீது அப்பகுதிக்கு ரோந்து வந்த சிங்கள கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில் கொண்டு எரிந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பியதால் ஒரு விசைபடகிற்கு 50,000 நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.