அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் அமெரிக்கா

 

அணு ஆயுத பயன்பாட்டை ஈரான் கைவிட மறுத்தால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க தயாராகும்படி அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்களை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. தனது அணுசக்தி தளங்களை கேமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் கையகப்படுத்தாது என்பதை உறுதிசெய்வதில் ஜோ பைடன் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். ஈரானில் அணுசக்தி திட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை தடுக்க தூரக ரீதியிலான முயற்சிகள் தோல்வியடைந்தால், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கும்படி அதிபர் ஜோபைடன் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

Translate »
error: Content is protected !!