இந்திய மொழிகளின் வளர்ச்சியை மேம்படுத்த குழு அமைப்பு – எம்பி பாரிவேந்தர் கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்திய மொழிகளின் வளர்ச்சியை மேம்படுத்த தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பாரிவேந்தர் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்திய மொழிகளின் வளர்ச்சியை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதா என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு வழிகாட்ட சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய மொழிகளைக் கற்பித்தல், வளர்ச்சியை ஊக்குவித்தல், அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகத்துக்கு இந்தக் குழு ஆலோசனை வழங்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

Translate »
error: Content is protected !!