ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உச்சிமாநாடு விரைவில் நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
சமீபத்தில் காணொலி வாயிலாக உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவுடன் இணைந்து முத்தரப்பு உச்சிமாநாட்டை நடத்த விவாதித்ததாக கூறப்படுகிறது. ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகளின் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் மாநாட்டை நடத்த விவாதித்ததாகவும், மூன்று நாடுகளின் திறந்த, வெளிப்படைத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்த நலன்கள் மற்றும் அக்கறைகளைக் கருத்தில் கொள்வது போன்ற கொள்கைகளின் அடிப்படையில் இம்மாநாட்டை நடத்த திட்டமிடபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா சீனா இடையே எல்லை பதற்றம் நீடித்து வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.