தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுகின்றன. ஒமைக்ரான் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று முன்தினம் 86 ஆக உயர்ந்தது.டெல்லியில் 6 மாதங்களில் இல்லாத அளவு நோய் தொற்று விகிதம் உயர்ந்துள்ளது. இதனால், மூன்றாவது அலை ஏற்படுமா? என்ற பயம் எழுந்து வருகிறது.
தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லி அரசும் ஒமைக்ரான் பரவலை சமாளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.