மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்க தயார் நிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்தவேண்டும் என்பதை ஆணையம் ஏற்று கொள்ளாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அப்பல்லோ நிர்வாகம், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தது. விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், கடந்த 36 மாதங்களாக விசாரணை நடைபெறாமலே கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், மருத்துவக்குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்களை பரிந்துரை செய்ய எய்ம்ஸ் இயக்குனருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வாரத்திற்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக விசாரணையை தொடங்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் ஜனவரி 24 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 3 மாதகால அவகாசம் கோர விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது

Translate »
error: Content is protected !!