ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள்… தலைமைச் செயலாளர் இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் ஒரே நாளில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Translate »
error: Content is protected !!