சென்னையில் 26 பேருக்கு ஒமைக்ரான் தொற்று – தமிழ்நாடு 3வது இடம்

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.

சென்னை,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. இது 

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 41 பேரின் மரபணு ஆய்வு முடிவுகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நலமுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் மராட்டியத்தில் 65 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும் ஓமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!